Saturday 18th of May 2024 12:40:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
தாயகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு  புலம்பெயா்ந்தோருக்கு அமைச்சா் டக்ளஸ் அழைப்பு!

தாயகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயா்ந்தோருக்கு அமைச்சா் டக்ளஸ் அழைப்பு!


நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் சரியான வரவேற்புக் கிடைத்திருக்கவில்லை.

இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர்.

ஆனால் தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், அற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE